அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து இன்னும் சில தினங்களில் ஸ்தம்பிக்கும்... வெளிவரும் பின்னணி
அரசாங்க முடக்கம் தொடர்ந்தால் தேசிய வான்வெளியின் சில பகுதிகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்க போக்குவரத்து செயலாளர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மூடும் நிலை ஏற்படும்
இது நாடு முழுவதும் பெரும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்படியான ஒரு முடிவை தாம் எடுக்க நேர்ந்தால், விமானங்கள் புறப்பட தாமதம் மற்றும் கொத்தாக ரத்து செய்தல் உள்ளிட்டவை நிகழும் என்றும் Sean Duffy எச்சரித்துள்ளார்.

பெருமளவில் விமான தாமதங்கள், பெருமளவில் ரத்து செய்யப்படுது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இல்லாததால் அதை நிர்வகிக்க முடியாததால், வான்வெளியின் சில பகுதிகளை நாங்கள் மூடும் நிலையும் ஏற்படும் என்றார்.
அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டதின் காரணமாக அனைத்து முக்கிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களிலும் கிட்டத்தட்ட 50 சதவீத ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தற்போது ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான அரசாங்க முடக்கம் காரணமாக இரண்டாவது மாதமாக சம்பளம் இல்லாமல் தவிப்பதால், பல ஊழியர்கள் தங்கள் குடும்பத்திற்காக பகுதி நேர தனியார் வேலைகளை மேற்கொண்டுள்ளதாக டஃபி தெரிவித்துள்ளார்.

அரசாங்க முடக்கம்
இதே நிலை நீடிக்கும் என்றால், பாதுகாப்பு கருதி விமான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நிலை வரும் என்றார். தற்போதைய நெருக்கடியான சூழலுக்கு முன்பே, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பல கட்டுப்பாட்டாளர்கள் கூடுதல் நேர வேலை செய்தனர்.

சிலருக்கு வலுக்கட்டாயமாக இரண்டு பொறுப்புகளும் அளிக்கப்பட்டது. தற்போதைய இந்த வரலாறு காணாத அரசாங்க முடக்கம் பணிச்சுமையை அதிகப்படுத்துவதாகவும் டஃபி தெரிவித்துள்ளார்.
செலவின மசோதாவை ஏற்றுக்கொள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறியதை அடுத்து, ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக அக்டோபர் 1 ஆம் திகதி அரசாங்கம் முடங்கியது.

இது அரசாங்க சேவைகளை முற்றிலுமாக ஸ்தம்பிக்க செய்தது. அத்துடன், லட்சக்கணக்கான அத்தியாவசிய தொழிலாளர்களை சம்பளம் இல்லாத நிலைக்கு தள்ளியது. ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்திலும் அரசாங்கம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |