எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதல்: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு
ஏமனில் உள்ள எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
ஹவுதி அமைப்பினர்
பாலஸ்தீனத்திற்காக சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பிற்கு, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க சரக்கு கப்பல்கள் செங்கடல் பகுதியில் செல்லும்போது ஹவுதி அமைப்பினர் தாக்குதலும் நடத்துகின்றனர்.
இதன் காரணமாக ஹவுதிக்களை குறிவைத்து அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
74 பேர் பலி
ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 38 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 171 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவியுள்ளனர். ஆனால், அதனை இஸ்ரேல் இடைமறித்ததாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |