அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு: 4 இளைஞர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்தநாள் விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் தல்லாபூசா(Tallapoosa) கவுண்டியில் உள்ள டேடெவில்லி(Dadeville) நகரில் 16 வயது இளைஞரின் பிறந்தநாள் விழாவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Google Street View
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டார்களா என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.
பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்
துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு அலபாமா(Alabama) சட்ட அமலாக்க முகமையின் ஜெர்மி பர்கெட் பேசுகையில், இந்த துயரமான சம்பவத்தை கடந்து செல்லவும், உண்மையை கண்டறிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் மிகவும் முறையான வழியில் தொடர்ந்து பணியாற்றப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.
WTVM
மேலும் நாளை பள்ளியில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும், குழந்தைகளை ஆறுதல்படுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் கண்காணிப்பாளர் ரேமண்ட் போர்ட்டர் தெரிவித்துள்ளார்.
டேட்வில்லே ஒரு சிறிய நகரம், தற்போதைய துப்பாக்கி சூடு சம்பவம் இந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் பாதிக்கப் போகிறது என்று பாஸ்டர் பென் ஹேய்ஸ் தெரிவித்துள்ளார்.