பிரித்தானியா, அமெரிக்காவை நம்ப முடியாது! கொந்தளித்த ரஷ்யா
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய உளவுத்துறையை நம்ப முடியாது என ஐ.நாவுக்கான ரஷ்ய துணை தூதர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதேசமயம், உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உளவுத்துறை தகவல்களை நம்ப முடியாது என்று ஐ.நாவுக்கான ரஷ்ய துணை தூதர் Dmitry Polyanskiy கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உளவுத்துறையை நாங்கள் நம்பவில்லை, அவர்கள் உலகம் முழுவதையும் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றியுள்ளனர்.
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
டான்பாஸில் உக்ரைன் ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய Polyanskiy, ரஷ்யா தனது இராணுவப் பயிற்சிகளை எங்கு நடத்தலாம் என்று யாரும் கூற முடியாது என கூறினார்.