அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக தாக்குதல் ஒத்திவைப்பு: தோஹாவில் சந்திக்கும் தலைவர்கள்
மத்திய கிழக்கில் மீண்டும் உருவான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவும் ஈரானும் தற்போது தாக்குதலை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
தாக்குதல்களை ஒத்தி வைத்த ஈரான் மற்றும் அமெரிக்கா
லெபனான்-இஸ்ரேல் இடையிலான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற போக்குவரத்தில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவை காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகும் மோதல் நீடித்தது.
இந்நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை தணிக்க அமெரிக்காவும், ஈரானும் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் செவ்வாய்க்கிழமை கத்தாரின் தோஹாவில் இருநாட்டு பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா தனது தரப்பு தகவல்களை உறுதிப்படுத்தி இருந்தாலும் ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
பிராந்தியத்தில் உயரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த தற்காலிக அமைதி முடிவை எடுத்து இருப்பதாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
இந்த காலக் கட்டத்தில் எல்லா வகையான தாக்குதலையும் நிறுத்த முடிவு செய்து இருப்பதாகவும் மூத்த அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தாலும், இந்த சமீபத்திய நடவடிக்கை கப்பல் போக்குவரத்தில் தடையில்லா சூழ்நிலையை ஏற்படுத்த உதவும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால், அந்நாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததை விடுத்ததை அடுத்து இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |