ஈரானிய தலைவர்கள் குறித்த தகவலுக்கு 10 மில்லியன் டொலர் பரிசு: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு
ஈரானிய தலைவர்கள் குறித்த தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் பரிசு தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
10 மில்லியன் டொலர் பரிசு
ஈரானின் தலைவர்கள் குறித்த முக்கிய தகவல்களை தந்து உதவும் நபர்களுக்கு 10 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரான் தலைவர்களை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த பரிசு தொகையானது அமெரிக்காவின் நீதிக்கான வெகுமதி என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த பட்டியலில், ஈரான் புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி(Mojtaba Khamenei) முதன்மையாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
அவரை தொடர்ந்து, ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் உளவு துறை அமைச்சர் ஆகியோர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் அதிகார மையத்தில் இருப்பவர்களை குறிவைத்து அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, இருநாடுகளுக்கு இடையிலான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |