ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதிக்கு விலக்கு: அமெரிக்கா எடுத்துள்ள தீர்க்கமான முடிவு
ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதிக்கான தடைகளுக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எரிசக்தி துறைக்கு தடைகளில் இருந்து விலக்கு
மத்திய கிழக்கில் நிலவி வரும் நிலையற்ற தன்மை காரணமாக உலகளவிலான எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனை சீராக்கும் பொருட்டு ரஷ்யாவின் எரிசக்தி மீதான தடைகளுக்கு குறுகிய கால சலுகைகள் வழங்கப்படுவதாக அமெரிக்க நிதித்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம்(OFAC) அறிவித்துள்ளது.
இந்த தற்காலிக சலுகையானது ஏப்ரல் 17ம் திகதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் மூலம் கடலில் தேங்கி நிற்கும் எரிசக்தி சரக்குகள் எந்தவொரு கூடுதல் பொருளாதார தடைகளும் இல்லாமல் தங்கள் இலக்குகளை அடைய அமெரிக்க நிதித்துறை அவகாசம் வழங்கியுள்ளது.
அத்துடன் இந்த சலுகையானது மே 16ம் திகதியுடன் காலாவதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் புதன்கிழமை வழங்கிய தகவலில், இதுவே இறுதி அவகாசம் என்றும், மே மாதத்திற்கு பிறகு இந்த விலக்கு மீண்டும் நீடிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |