புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்
வேலை மற்றும் தொழில் நிமித்தமாக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு அந்நாடு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
H-1B, L-1, EB-5 போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா (non-immigrant visas) கட்டணங்களை பெருமளவில் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க விசாக் கட்டணம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை.
புதிய விசா கட்டணம் 2024 ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள், கோட்பாட்டு மற்றும் தொழில்நுட்ப திறன்கள் தேவைப்படும் தொழில்களில் பணியமர்த்தும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு H-1B விசாக்களை வழங்குகின்றன.
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான நிபுணர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முதன்மையாக H-1B விசாவை நம்பியுள்ளன.
தற்போது 460 டொலராக உள்ள H-1B Visa Application Fee ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 780 டொலராக (69.5% உயர்வு) உயர்த்தப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உள் இடமாற்றம் செய்யும் L-1B Visa கட்டணம் 460 டொலரில் இருந்து 1,385 டொலராக (201% உயர்வு) உயர்த்தப்படும் என்றும்,
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் EB-5 Visa கட்டணம் 3,675 டொலரில் இருந்து 11,160 டொலராக (203% உயர்வு) உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்-1பி விசா பதிவுக் கட்டணம் 10 டொலரில் இருந்து 215 டொலராக (2050%) உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது , அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
United States Citizenship and Immigration Services, US non-immigrant visas H-1B, L-1 and EB-5 Visa, H-1B, L-1 Visa, EB-5 Visa, H–1B registration fees