விண்வெளியில் ஏவப்பட்ட உள்ள 10 லட்சம் செயற்கைகோள்; மஸ்கின் விண்வெளி தரவு மையத்திற்கு ஒப்புதல்
us approve spacex to deploy 1 million satelites: விண்வெளியில் தரவு மையம் அமைப்பதற்காக 10 லட்சம் செயற்கைகோள்களை ஏவும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன திட்டதிற்கு FCC ஒப்புதல் அளித்துள்ளது.
மஸ்கின் விண்வெளி தரவு மையத்திற்கு ஒப்புதல்
பூமியில், செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த தேவையான தரவு மையத்தை விண்வெளியில், சூரிய ஒளியில் இயங்கும் வகையில் அமைக்கும் திட்டம் குறித்து எலான் மஸ்க் நீண்டகாலமாக பேசி வருகிறார்.

விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், 10 லட்சம் செயற்கைக்கோள்கள் வரை நிலைநிறுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.
அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC), தற்போது இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள் FCC வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்பேஸ்எக்ஸின் "ஸ்டார்மைண்ட்" எனப்படும் 10 லட்சம் சுற்றுப்பாதை கணினி தொகுதிகள் பூமியில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய அளவிலான தரவுகளைச் செயலாக்கும் என்றும், இது மனிதர்களை சூரியனின் முழு சக்தியையும் பயன்படுத்துவதற்கு மேலும் நெருக்கமாகக் கொண்டுவரும்.

இந்த ஒப்புதல், விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ ஸ்பேஸ்எக்ஸை அனுமதிக்கும்" என தெரிவித்துள்ளது.
FCC யின் உத்தரவின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நவம்பர் 2033 க்குள் தனது நிலைநிறுத்தப் பணிகளைத் தொடங்க வேண்டும். நவம்பர் 2035 க்குள் ஒப்புதல் அளிக்கப்பட்ட செயற்கைக்கோள் கூட்டத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் செயற்கைகோள்களையும், 2038 க்குள் குறைந்தபட்சம் 5 லட்சம் செயற்கைகோள்களையும் நிலா நிறுத்த வேண்டும்.
விண்வெளியில் உள்ள தரவு மையங்களுக்கு சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்துவது மின் கட்டமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும், பூமியில் உள்ள தரவு மையங்களை குளிர்விக்கத் தேவைப்படும் நீர் தேவையையும் குறைக்கும் என இதனை ஆதரிப்போர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாதிப்புகள்
அதே போல், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது என அமெரிக்க வானியல் சங்கம் (AAS), வயாசாட் என்ற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம், அமேசானுக்குச் சொந்தமான குய்ப்பர் சிஸ்டம்ஸ் ஆகியவை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வலியுறுத்தின.
இந்த திட்டம், மற்ற அத்தியாவசிய செயற்கைக்கோள்களைப் பாதிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் நிகழக்கூடிய மோதல்கள், மற்றும் வளிமண்டல மாசு உள்ளிட்ட கவலைகளை எழுப்பியுள்ளனர்.

தற்போது சுமார், 16,000 க்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் 10,000 மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
ஏற்கனவே ஒளி மாசுபாட்டால் பெரு நகரங்களில் வானில் நட்சத்திரங்களை பிரகாசமாக அதிகளவில் காண முடியாமல் உள்ள சூழலில், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களால் எதிர்காலத்தில் இரவில் வானில் நட்சத்திரங்களையே பார்க்க முடியாத சூழல் வரும் என முன்னதாக ஐரோப்பிய தெற்கு வானாய்வகம்(european southern observatory) நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.