பிரபல மருந்து நிறுவனத்தின் சிங்கிள்-டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம்!
பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்துள்ள சிங்கள்-டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமேரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளிக்கவுள்ளது.
உலகின் பல நாடுகளில் கிட்டத்தட்ட 44,000 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அதில் பல வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 66% பயனுள்ளதாகவும், தொற்று நோயின் கடுமையான பாதிப்புகளைத் தடுப்பதில் 85% பயனுள்ளதாகவும் முடிவில் தெரியவந்தது.
அமெரிக்காவில் ஏற்கெனவே ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்புசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுல்ல நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்துள்ள சிங்கள்-டோஸ் கொரோனா தடுப்பூசியை நாட்டின் மூன்றாவது அவசரகால தடுப்பூசியாக FDA அங்கீகரிக்கவுள்ளது.
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான எஃப்.டி.ஏவின் ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை கூடி இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ஆம் திகதி முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.