புல்வெளியில் விழுந்து வெடித்து சிதறிய அமெரிக்கா ராணுவ ஹெலிகாப்டர்: பரவிய கட்டுக்கடங்காத காட்டுத்தீ
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் புல்வெளி ஒன்றில் ராணுவத்தின் அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவத்தில் அதில் பயணித்த இரண்டு பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஷெரீப் அலுவலகத்திற்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்தின் அப்பாட்சி ஏ.எச் 64 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தினர்.
மேலும் விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் போர்ட் ஹுட் தளத்தை மையமாக கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் அவசர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
காட்டுத்தீ
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி புல்வெளி நிறைந்த பகுதி என்பதால் அப்பகுதியில் பயங்கர தீ விபத்தானது ஏற்பட்டது.

இந்த தீ விபத்து பின்னர் கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக அதிகரித்ததை அடுத்து அப்பகுதியை சுற்றி இருந்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தின் போது ஹெலிகாப்டர் ஆனது வேறு எந்த கட்டிடத்தின் மீதோ அல்லது வீடுகள் மீதோ மோதவில்லை என்பதை பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கிளிஃப் கோல்மன் உறுதிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |