பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய உயிர்க்கொல்லி தாக்குதல்: தீப்பிடித்து எறிந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
போதைப்பொருள் கப்பல் மீது தாக்குதல்
கிழக்கு பசிபிக் கடல் பிராந்தியம் வழியாக போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
Earlier today, at the direction of President Trump, the Department of War carried out a lethal kinetic strike on yet another narco-trafficking vessel operated by a Designated Terrorist Organization (DTO) in the Eastern Pacific.
— Secretary of War Pete Hegseth (@SecWar) October 29, 2025
This vessel, like all the others, was known by our… pic.twitter.com/mBOLA5RYQe
இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த நான்கு பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸ்பெத் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் X தளத்தில் அவர் வெளியிட்ட தகவலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவு பேரில் அமெரிக்க ஆயுத படை மற்றொரு போதைப்பொருள் கடத்தல் மீது உயிர்க்கொல்லி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க ராணுவத்தின் குண்டுகளால் தாக்கப்பட்ட கப்பல் தீப்பிடித்து எரியும் காணொளி ஒன்றையும் செயலாளர் பீட் ஹெக்ஸ்பெத் வெளியிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இந்த ராணுவ தாக்குதலின் போது அமெரிக்க பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை நடத்தப்பட்ட இதைப் போன்ற மற்றொரு தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |