தற்காலிக தடையின்போதே.,GMLRS ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா
அமெரிக்கா மீண்டும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காப்பிற்கான ஆயுதங்கள்
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் (Donald Trump) நிர்வாகம் உக்ரைனுக்கு சில முக்கியமான ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்தியது.
அப்போது உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க முடிவு செய்திருக்கிறோம்; முதற்கட்டமாக தற்காப்பிற்கான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு அதிகாரிகள்
அமெரிக்க இராணுவம் 155 மி.மீ அளவிலான பீரங்கி குண்டுகள் மற்றும் துல்லிய தாக்குதல் நடத்தும் GMLRS (மொபைல் ரொக்கெட் பீரங்கி) ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக இரண்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால், எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படுகின்றன, அனுப்பப்பட்டதா என்பதை அதிகாரிகள் கூறவில்லை.
சமீபத்திய ஏற்றுமதிகளில் குண்டுகள் மற்றும் பீரங்கி ஏவுகணைகள் மட்டுமே ஏன் சேர்க்கப்பட்டுள்ளன, மற்ற ஆயுதங்களை மீண்டும் அனுப்புவதற்கு ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |