தரையில் விழுந்த அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம்: விசாரணை வாரியம் அமைப்பு
லாஸ் வேகாஸ் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் F-35 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான F-35 ரக போர் விமானம்
செவ்வாய்க்கிழமை காலை லாஸ் வேகாஸின் இந்தியன் ஸ்பிரிங்ஸ்(Indian Springs) பகுதிக்கு வடகிழக்கே ஒதுக்குப்புறமான இடத்தில் அமெரிக்க ராணுவத்தின் F-35 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தானது நெவாடா சோதனை மற்றும் பயிற்சி மையத்தின் பாதுகாக்கப்பட்ட எல்லைக்குள் நிகழ்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் இந்த விபத்து ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானியின் நிலைமை
அதிர்ஷ்டவசமாக விமான தரையில் வீழ்வதற்கு முன்னதாகவே விமான பாராசூட் உதவியுடன் விமானத்தில் இருந்து வெளியேறினார்.
அவரை உடனடியாக மீட்ட மீட்பு படையினர், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் விமானிக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா அல்லது வானிலை சூழல்கள் காரணமா என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.
எனவே விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க அதிகாரப்பூர்வ பாதுகாப்பு விசாரணை வாரியம் ஒன்று அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |