போர் விமானம் முதல் ட்ரோன்கள் வரை., ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு
US Army Lose Values in Iran War: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா 30 மில்லியன் டொலர் அளவிலான 12 நவீன போர் விமானங்களை இழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் போரில் அமெரிக்காவின் இழப்பு
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ராணுவ தாக்குதலை முன்னெடுத்தனர்.
இதற்கு பதிலடியாக ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கிட்டத்தட்ட 10 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில் அமெரிக்காவுக்கு அதிகப்படியான இழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் என 81 ராணுவ விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவுக்கு மொத்தமாக 3.3 பில்லியன் டொலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இதில் F15 ரக விமானத்தின் விலை 30 மில்லியன் டொலரை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த போர் நடவடிக்கையில் அமெரிக்கா F-35A லைட்னிங் II ஸ்டீல்த் விமானம், F15 விமானங்கள், MQ-1 ரீப்பர் டிரோன்கள் ஆகியவற்றையும் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றின் விலை சுமார் 30 மில்லியன் முதல் 50 மில்லியன் டொலர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமான தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 8 F-15Es ரக விமானங்கள் சேதமடைந்துள்ளன.