ஈரான் இதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.,இல்லையென்றால்:அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் தொற்றிய பதற்றம்
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி ஈரான் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் முன்னெடுத்தார்.
இதையடுத்து ஈரானும் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் சிதைந்து, மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் தொற்றியுள்ளது.
ஈரான் இதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் இனி நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானிய உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், இருதரப்பு தூதரக முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றால் ஹார்முஸ் ஜலசந்தியில் இனி தாக்குதல் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டை ஈரான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் தடையின்றி செல்வதை ஈரான் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த வாக்குறுதிகளை ஈரான் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கவில்லை என்றால் அது ஈரானுக்கு நல்ல முடிவாக இருக்காது என்று இது குறித்து பேசிய அமெரிக்க அதிகாரி எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |