'உயிருடன் மூட்டை பூச்சிகளால் உண்ணப்பட்டார்' சிறையில் இறந்து கிடைத்த நபரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்த்தில் சிறையில் பூச்சிகளால் கடித்து உண்ணப்பட்டு கொடூரமாக உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நியாயம் கேட்டு போராடிவருகின்றனர்.
அட்லாண்டா சிறைச்சாலையில் மோசமான நிலைமைகளும் பூச்சிக் கடிகளும் ஒரு கைதியின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறையில் பூச்சிக்கடிகளால் உயிரிழந்த நபர்
கடந்த ஆண்டு Fulton கவுண்டி சிறையில் இறந்த கைதியான லாஷான் தாம்சனின் (Lashawn Thompson) குடும்பத்தினர், அவரது மரணம் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த சிறையை மூடிவிட்டு புதிதாக கட்டப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர் .
மூன்று மாத சிறைவாசத்திற்குப் பிறகு 2022 செப்டம்பர் மாதம் தாம்சன் இறந்து கிடந்தார். அவர் இறந்ததற்கு சிறையின் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் பூச்சி கடித்தால் ஏற்படும் சிக்கல்கள் தான் காரணம் என்று குடும்ப வழக்கறிஞர் மைக்கேல் ஹார்பர் குற்றம் சாட்டினார்.
Michael Harper
விலங்குகளுக்கு கூட ஏற்றதல்ல
தாம்சனின் சிறை அறையில் உள்ள நிலைமைகளைக் காட்டுவதாகக் கூறப்படும் புகைப்படங்களை வெளியிட்ட வழக்கறிஞர் ஹார்பர், “அவர் இருந்த அறை நோயுற்ற விலங்குகளுக்கு கூட ஏற்றதல்ல. இது மன்னிக்க முடியாதது மற்றும் வருந்தத்தக்கது" என்று அவர் கூறினார்.
தாம்சன் (35), புளோரிடாவின் வின்டர் ஹேவனைச் சேர்ந்தவர், ஆனால் அட்லாண்டாவை நேசித்தார், மேலும் இரு நகரங்களுக்கு இடையில் பலமுறை சென்றார்.
தாம்சன் ஜூன் 2022 முதல் ஒரு தவறான தாக்குதல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தார், மேலும் அவரது மனநலப் பிரச்சினைகள் காரணமாக சிறையின் மனநலப் பிரிவில் வைக்கப்பட்டார் என்று ஹார்பர் கூறுகிறார்.
Michael Harper
ஃபுல்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் அறிக்கை
ஃபுல்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கையில், தாம்சன் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்த தகவல்கல் அல்லது மருத்துவ சேவையை ஏற்கும் அல்லது மறுக்கும் உரிமை குறித்து அவர் என்ன முடிவுகளை எடுத்தார் என்பது குறித்த தரவுகளைப் பகிர்வதை சட்டம் தடுக்கிறது என்று தெரிவித்தது.
ஆனால், சிறையின் நிலவரம் மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டது. மேலும், சிறைச்சாலையை புதிதாக காட்டித் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.