இரவில் ஈரானை சூறையாடிய அமெரிக்க படைகள்: முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்
ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை குழு 11வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் முக்கிய மூலோபாய சொத்துக்களை அழிப்பதே தங்களது ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று சமூக வலைத்தளம் வழியாக சென்ட்காம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், விமான ஹேங்கர்கள், ஆளில்லா விமான சேமிப்பு இடங்கள், கடல்சார் சொத்துக்கள், தளவாடங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மேற்கொண்டு வரும் அராஜக போக்கிற்கு எதிராகவே இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாக சென்டகாம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதல் நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி இருப்பதோடு, கடற்பயண சுதந்திரத்தையும் சீர்குலைத்து இருப்பதாக சென்ட்காம் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |