15 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானிய கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடி
ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, செங்கடல் பகுதியாக செல்லும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தி வருகின்றன.
#Houthi #Yaman meledakkan sebuah kapal tanker #Inggris.
— Vindyarto (@Vindyartop) October 3, 2024
Rekaman itu menunjukkan serangan terhadap kapal tanker minyak #CordeliaMoon menggunakan kapal penangkap ikan kamikaze dengan muatan bahan peledak.
Penjaga bersenjata di kapal tanker tidak dapat menghentikan serangan. pic.twitter.com/82Mu4HeRv4
அந்த வகையில் நேற்று செங்கடல் வழியாக சென்ற பிரித்தானியாவின் “Cordelia Moon” எண்ணெய் டேங்கர் கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தி இருந்தது.
அமெரிக்கா பதிலடி தாக்குதல்
இது அப்பகுதியில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஏமனில் உள்ள 15 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலை மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் ஹவுதியின் தாக்குதல் இராணுவ திறன் அமைப்புகள் உட்பட 15 நிலைகள் மீது உள்ளூர் நேரப்படி 5pm (3pm UK time) நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலானது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் சர்வதேச நீர்ப்பாதை வழிசெலுத்தலின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |