2 வல்லரசு நாடுகளின் 2 சக்திவாய்ந்த போர் விமானங்கள்: ஒரே நாளில் விபத்துக்குள்ளானதால் அதிர்ச்சி: வீடியோ
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசு நாடுகளின் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் ஒரே நாளில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனிப்போர் காலத்தின் மிகப்பெரிய பின்னணியை கொண்டிருந்த இந்த இரண்டு விமானங்களும் ஒரே நாளில் எதிர்பாராத விபத்தில் சிக்கி அழிந்துள்ளன.
அமெரிக்காவின் B-52 விமான விபத்து
அமெரிக்க விமானப்படை சொந்தமான B-52 போர் விமானம் கலிபோர்னியாவின் மோஜாவே பாலைவனத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து திங்கட்கிழமை புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
All 8 crew DEAD in B-52 bomber crash in routine test flight — CNN
— RT (@RT_com) June 16, 2026
'Indications are crash was not survivable' — officialshttps://t.co/Llhou3fYku pic.twitter.com/DwEmKbAhTb
இந்த போர் விமான விபத்தில் அதிலிருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிட்டத்தட்ட 8 எஞ்சின்களை கொண்ட இந்த போர் விமானம், அணு ஆயுதங்கள் மற்றும் சாதாரண குண்டுகள் என அனைத்தையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
வழக்கமான சோதனையின் பயணத்திற்காக புறப்பட்ட போது விமானம் ஓடுபாதையிலேயே விழுந்து விபத்துக்குள்ளானதாக விமானப்படை கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் TU-22M3 விமான விபத்து
அமெரிக்க விமானப் படையின் குண்டு வீச்சு விமானம் விபத்துக்குள்ளான அதே நாளில் ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானமான TU-22M3 பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
SHOCKING COINCIDENCE: On June 15, 2026, TWO strategic bombers crashed on the SAME DAY — first Russia's Tu-22M3 in Siberia (4 pilots survived), then US B-52 in California (8 crew died) ❄️🇺🇸
— RB. (@KailashVashi) June 16, 2026
Both Cold War-era aircraft. Both gone in one day. pic.twitter.com/rxZ01MztPX
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் இந்த விமான விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக வெளியேறி விட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் TU-22M3 போர் விமானம் அங்காரா நதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானம் ரஷ்யாவின் பனிப்போர் காலத்தில் அணு ஆயுதத் தற்காப்புத் திறனை வலுப்படுத்த உருவாக்கப்பட்டது.
தரை மற்றும் கடல் வழி இலக்குகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விமானம், இன்று உலகின் சக்தி வாய்ந்த போர் விமானங்களின் வரிசையில் இடம்பெறுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |