அமெரிக்காவில் நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: இளைஞர் 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு தாக்குதல்
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பால்டிமோர்(Baltimore) பகுதியில் நடைபெற்ற இரவு நேர கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாலிமோரின் கிரெட்னா அவென்யூவில்(Gretna Avenue) 800 பிளாக்கில் சுமார் நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்ட கொண்டாட்டத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:35 மணி அளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
#BREAKING 30 injured, 4 Dead in a mass shooting in Brooklyn neighborhood of Baltimore, Maryland
— Oliya Scootercaster ? (@ScooterCasterNY) July 2, 2023
Shooting happened at what police described as "Community gathering" shortly before 1am.
Video via Citizenapp pic.twitter.com/Qb8aIkQgwx
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட பால்டிமோர் பொலிஸார், பலர் துப்பாக்கி சூடு காயங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அத்துடன் 29 பேர் வரை துப்பாக்கி சூட்டில் காயமடைந்து இருந்த நிலையில், அவற்றில் படுகாயமடைந்து இருந்த 9 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக பால்டிமோர் பொலிஸார் அனுமதித்தனர்.
மீதமுள்ள காயமடைந்த 20 பேர் தாங்களாகவே சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.
2 பேர் உயிரிழப்பு
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் பால்டிமோர் காவல்துறை அதிகாரி ரிச்சர்ட் வொர்லி, நடத்தப்பட்டுள்ள பயங்கரமான துப்பாக்கி சூடு குறித்து தீவிரமான விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த குற்றத்தை நிகழ்த்திய நபரை விரைவாக அடைவோம் என்றும், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |