மூளை புற்றுநோயால் அமெரிக்க பேஸ்பால் ஜாம்பவான் மரணம்
அமெரிக்க பேஸ்பால் ஜாம்பவான் டிம் வேக்ஃபீல்டு மூளை புற்றுநோயால் உயிரிழந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தொடர் சாம்பியன்
பேஸ்பால் விளையாட்டில் இருமுறை உலகத்தொடர் சாம்பியன் பட்டம் வென்றவர் டிம் வேக்ஃபீல்டு(57).
Wikipedia
அமெரிக்காச் சேர்ந்த ஜாம்பவானாக விளங்கிய இவர், தனது தனித்துவமான Pitching-காக கவனம் பெற்றார். இது அவரது Knuckleball விளையாட்டின் விரிவான பயன்பாட்டினால் சிறப்பிக்கப்பட்டது.
பேஸ்பால் விளையாட்டில் இருந்து வேக்ஃபீல்டு ஓய்வு பெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன.
மூளை புற்றுநோய்
இந்த நிலையில் தான் அவருக்கு மூளை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேக்ஃபீல்டு தொடர் சிகிச்சையில் இருந்தார்.
நோயுடன் போராடிய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேக்ஃபீல்டு மரணத்தை ரெட் சாக்ஸ் உறுதிப்படுத்தியது.
மேலும் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'டிம் வேக்ஃபீல்டின் இழப்பால் எங்கள் இதயங்கள் உடைந்துள்ளன' என குறிப்பிட்டுள்ளது.
(AP Photo/Mary Schwalm, File)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |