கூட்டத்திற்கு வராததால் 90% ஊழியர்கள் பணிநீக்கம்! 11 பேருக்குதான் வேலை..கோபமடைந்த CEOயின் கடிதம்
அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 90 சதவீத ஊழியர்களை தலைமை செயல் அதிகாரி நீக்கியதாக கூறியது பேசுபொருளாகியுள்ளது.
ஆலோசனைக் குழு கூட்டம்
அமெரிக்காவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்று, தமது ஊழியர்களுக்கு ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
நிறுவனத்தின் CEO பால்ட்வின் மின்னஞ்சல் வாயிலாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இணைய வாயிலாக நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் 110 ஊழியர்களில் 11 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பால்ட்வின், கூட்டத்தில் பங்கேற்காத 99 பேரையும் பணிநீக்கம் செய்வதாக மின்னஞ்சல் கடிதம் அனுப்பியுள்ளார்.
99 பேர் பணிநீக்கம்
தற்போது இந்த மின்னஞ்சல் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறித்த கடிதத்தில்,
"நீங்கள் ஒப்புக்கொண்ட விடயத்தை செய்ய தவறிவிட்டீர்கள். ஒப்பந்தப்படி உங்கள் பனியின் ஒரு பகுதியை செய்ய தவறிவிட்டீர்கள். 110 பேரில் 11 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த 11 பேர் மட்டுமே பணியில் தொடருவார்கள். எஞ்சிய அனைவரும் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்" என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |