ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானப்படை... அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்

Donald Trump Iran Strait of Hormuz
By Arbin Mar 20, 2026 10:20 AM GMT
Report

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் வகையில், ஈரானின் கப்பல்கள் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தலை முறியடிக்க, அமெரிக்கப் படைகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும்

ஈரான் ஹார்முஸ் நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானப்படை... அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர் | Us Battle To Reopen Hormuz

இதன் வழியாகவே உலகின் எண்ணெய் வளத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்துள்ள நிலையில், கப்பல் போக்குவரத்தை ஈரான் மொத்தமாக முடக்கியது.

உண்மையில் எதிர்ப்பை மீறினால் தாக்கப்படும் என்ற அச்சுறுத்தலை அடுத்து கப்பல்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்தே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க தாழ்வாகப் பறக்கும் A-10 Warthogs மற்றும் Apache தாக்குதல் ஹெலிகொப்டர்களை அமெரிக்கப் படைகள் அனுப்பியுள்ளது.

ரஷ்யாவை அடுத்து ஈரானுக்கு சலுகை... எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா தீவிரம்

ரஷ்யாவை அடுத்து ஈரானுக்கு சலுகை... எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா தீவிரம்

இவை ஈரானின் கப்பல்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் என்றே கூறுகின்றனர். இதனிடையே, ஈரானிய ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்தை முறியடித்து, நீரிணையை மீண்டும் திறக்க பென்டகன் முயற்சித்து வருகிறது.

பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதன் பின்னர் சுமார் 90 கப்பல்கள் மட்டுமே நீரிணையில் பயணப்பட்டுள்ளன. பொதுவாக நாளுக்கு 135 கப்பல்கள் வரையில் ஹார்முஸ் நீரிணையில் பயணப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், அந்த நீரிணை வழியாக கப்பல்கள் அப்பகுதிக்குள் நுழைவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும், அமெரிக்க இராணுவக் போர்க்கப்பல்கள் பிற கப்பல்களுக்குத் துணையாகச் செயல்படக்கூடும் என்பதே நம்பிக்கையாக உள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானப்படை... அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர் | Us Battle To Reopen Hormuz

ஆனால் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தயக்கம் காட்டி வந்ததுடன், தற்போது போர்க்கப்பல்களை அனுப்பாமல், ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ளது.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகச் சீர்செய்து, மீண்டும் இயல்பு நிலைக்கு நெருக்கமாகச் செயல்பட வைப்பதற்கு அமெரிக்காவிற்குப் பல வாரங்கள் ஆகலாம் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

போர்நிறுத்தத்திற்குப் பின்னரே

ஹார்முஸ் நிரிணை விவகாரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் பல ட்ரம்பின் கோரிக்கையை எந்த தயக்கமும் இன்றி நிராகரிக்க, அவர் தனித்துவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையிலேயே தற்போது அமெரிக்கப் படைகள் ஹெலிகொப்டர்களை நீரிணைக்கு அனுப்பியுள்ளது. இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதில் பங்களிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக ஆறு முக்கிய சர்வதேச வல்லரசுகள் வியாழக்கிழமை தெரிவித்தன.

எனினும், அத்தகைய எந்தவொரு முன்னெடுப்பும் போர்நிறுத்தத்திற்குப் பின்னரே மேற்கொள்ளப்படும் என்று அவற்றில் மூன்று நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானப்படை... அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர் | Us Battle To Reopen Hormuz

முன்பு டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாடுகளே வியாழக்கிழமை தங்கள் நிலையை அறிவித்துள்ளன.

மேலும், உதவ முன்வரும் நாடுகளின் அர்ப்பணிப்பைத் தாங்கள் வரவேற்பதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. ஆனால் இத்தாலி, ஜெஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், தாங்கள் எந்தவொரு உடனடி இராணுவ உதவியைப் பற்றியும் பேசவில்லை என்பதை வியாழக்கிழமை பிற்பகுதியில் தெளிவுபடுத்தின மேலும், போர் நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இந்த மூன்று நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US