ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்பிய நபர்... நாடுகடத்தப்படும் சூழலில் அவரே சிக்கியது அம்பலம்
அமெரிக்காவின் டெக்சாஸ் எல்லையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்பிய அதிகாரி ஒருவர், தாமும் ஒரு ஆவணமற்ற புலம்பெயர் நபர் என்பதை உறுதி செய்யப்பட்டதில் அதிர்ந்து போயுள்ளார்.
அம்பலமாகியுள்ள பிண்ணனி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முற்படும் மக்களை கண்காணித்து வெளியேற்றும் பணியில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாகனங்களிலும் ஹெலிகொப்டர்களிலும், தற்போது ட்ரோன் மூலமாகவும் எல்லைகளில் அத்துமீறும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
@getty
ரால் ரோட்ரிக்ஸ் என்பவர் அமெரிக்க கடற்படையின் ராணுவ பொலிஸ் படையில் சேவையாற்றி, பின்னர் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு சேவையில் பணியாற்றி வருகிறார்.
ஆனால் அமெரிக்காவின் இந்த அமைப்புகள் எதுவும் இவரது பிறப்பிடம் உள்ளிட்ட எந்த தகவலையும் அதுவரை உறுதி செய்யவே இல்லை. இந்த நிலையில், 54 வயதான ரால் தற்போது தமது சகோதரருக்கு அமெரிக்காவில் விசா பெற உதவ முன்வந்த போது, அவரது பிண்ணனியும் அம்பலமாகியுள்ளது.
2018 ஏப்ரல் மாதம் மத்திய விசாரணை அதிகாரிகள் இவரிடம் காண்பிக்கும் வரையில் தனது மெக்சிகன் பிறப்புச் சான்றிதழை இவர் ஒருமுறை கூட கண்ணால் பார்த்ததில்லை. இதனையடுத்து ரால் கட்டாய விடுப்புக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், விசாரணை முடிவுக்கு வந்ததும் பணியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளனர்.
@getty
பிறப்புச் சான்றிதழும் போலி
இந்த விவகாரம் தொடர்பில் ரால் தமது தந்தையிடம் விசாரிக்க, அதுவரை தாம் பயன்படுத்தி வந்த அமெரிக்க பிறப்பு சான்றிதழும் போலி என்பது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மெக்சிகோவில் பிறந்த ரால் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இந்த தகவலை அறிந்த பின்னர் ரால் ஒருமுறை கூட தமது தந்தையை தொடர்புகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது ஒருபக்கம், தற்போது துறை சார்ந்த நண்பர்களும் ஏமாற்று பேர்வழி என ராலை ஒதுக்கி வைத்துள்ளனர். தமது பணியின் ஒருபகுதியாக ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை இரக்கமின்றி வெளியேற்றிய ரால் அமெரிக்காவில் தொடர்ந்து தங்க தமக்கு உரிமை உள்ளது என நிரூபிக்க போராடினார்.
@getty
இறுதியில் அந்த போராட்டத்தில் வென்றாலும், புதிய சிக்கலாக அவரது மகன் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழலில் உள்ளார்.
இந்த விவகாரத்தில் ரால் தலையிட முடியாது என்பதால், அவரது மகன் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.