இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுவன் உயிருடன்.., மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட சம்பவம்!
அமெரிக்காவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 16 வயது சிறுவன் இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சம்மி பெர்கோ (Sammy Berko) எனும் 16 வயது சிறுவன், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அதிசயமான முறையில் உயிருடன் எழுந்து மருத்துவர்களே குழப்பத்தில் ஆழ்த்தினார்.
மிசோரி நகரத்தைச் சேர்ந்த பெர்கோ, உள்ளூர் உடற்பயிற்சி கூடத்தில் ராக் ஏறும் (Rock Climbing) போது மாரடைப்பு ஏற்பட்டதால், ஜனவரி 7-ஆம் திகதி மோசமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
(Caring Bridge/Sammy Berko)
உடல் அசைந்தது
பெர்கோவிற்கு ஜிம் ஊழியர்கள், அவசரகால பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரால் இடைவிடாத CPR வழங்கப்பட்டது. இருப்பினும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவமனை ஊழியர்கள் அவரது குடும்பத்தினருக்கு அவர் இறந்துவிட்டதாக சோகமான செய்தியை தெரிவித்தனர்.
இதையடுத்து, தன் மகனுக்கு விடைகொடுக்க தைரியத்தை திரட்டிக்கொண்டு அவரது தாய் ஜெனிஃபர் பெர்கோ வந்துள்ளார். அப்போது, அவருடைய கணவர் சம்மி பெர்கோவின் உடல் நகர்வதை கவனித்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்தபோது அந்த வாலிபர் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
(Caring Bridge/Sammy Berko)
மருத்துவர்கள் ஆச்சரியம்
"அவர்கள் ஒவ்வொருவரும் பின்னர் எங்களிடம் வந்து, தாங்கள் இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை என்று சொன்னார்கள்" என்று ஜெனிஃபர் கூறினார்.
2020-ஆம் ஆண்டில் அவர்களின் இளைய மகன் பிரான்கி அரிதான மரபணுக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். இப்போது சம்மியும் உயிரிழந்ததாக பெரும் சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு, அவர் உயிருடன் மீண்டு வந்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
(Caring Bridge/Sammy Berko)