இஸ்ரேலில் செல்போனை பயன்படுத்தி உயிரிழந்த மகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்த அமெரிக்க தொழிலதிபர்
இஸ்ரேலில் மகளின் செல்போனை கொண்டு அவரது இறந்து உடலை அமெரிக்க தொழிலதிபர் கண்டுபிடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உயிரிழந்த இளம்பெண்
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த இயால் வால்ட்மேன் என்பவரின் மகள் டேனிலா, அவர் மெலானக்ஸ் என்ற கணினி விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இயால் வால்ட்மேன் தனது மகள் டேனிலாவுடன் கடந்த 2021ம் ஆண்டு இஸ்ரேலில் குடிபெயர்ந்தார்.
கடந்த 7ம் திகதி இஸ்ரேலின் தெற்கில் காசா எல்லைக்கு அருகே நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டேனிலா என்ற இளம் பெண் அவருடைய காதலர் நோம் என்பவரும் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சியில் திடீரென புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதலை தொடர்ந்தனர். இதில் 270 பேர் வரை கொல்லப்பட்டனர், மற்றும் பலர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
செல்போன் மூலம் மகளின் கண்டுபிடித்த தந்தை
இதற்கிடையில் டேனிலாவின் தந்தை இயால் வால்ட்மேன் தொழில்ரீதியாக இந்தோனேசியாவில் தங்கியிருந்து உள்ளார்.
அப்போது மகளின் செல்போனில் இருந்து அபாய எச்சரிக்கை வந்ததை தொடர்ந்து, டேனிலாவின் தந்தை இயால் வால்ட்மேன் உடனடியாக இஸ்ரேலுக்கு விமானம் மூலம் வந்தடைந்துள்ளார்.
பின் மகள் பயன்படுத்திய ஐபோனின் இருப்பிடத்தை கண்டறியும் வசதியை பயன்படுத்தி இயால் வால்ட்மேன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
ஆனால் அங்கு சென்று பார்த்தபோது தந்தை இயால் வால்ட்மேனுக்கு மகள் டேனிலா மற்றும் அவரது காதலர் நோம் இருவரது உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |