கலிபோர்னியா வீடொன்றில் துப்பாக்கிச்சூடு., குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் மரணம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
அலமேடா நகரில் உள்ள கிட்டி ஹாக் சாலையில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக அல்மேடா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்கத்து வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக ஒருவர் தங்களுக்கு போன் செய்ததாக அலமேடு பொலிஸார் தங்கள் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு குண்டடி பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
United States of America, USA News in Tamil, California