அமெரிக்காவில் மனைவியை குறித்து வைத்து ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி துப்பாக்கி சூடு: 3 பேர் பலி
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பிரபல பைக்கர் பாரில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியான ஜான் ஸ்னோலிங்(59) தெற்கு கலிபோர்னியாவின் டிராபுகோ பள்ளத்தாக்கில் உள்ள பிரபலமான பைக்கர் பாரில் புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தனார்.
இதில் 3 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 6 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இரவு 7 மணிக்கு பிறகு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக ஆரஞ்சு கவுண்டி ஷெரீப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Jae C. Hong/AP
தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்த முயன்று அது தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தாக்குதல்தாரியான ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஜான் ஸ்னோலிங்-ஐ பொலிஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
பின்னணி காரணம்
பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையின் முடிவில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஜான் ஸ்னோலிங், தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை குறி வைத்து இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Los Angeles Times via Getty Image
இதில் அதிர்ஷ்டவசமாக அவரது முன்னாள் மனைவி சில காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் வழங்கியுள்ள தகவலில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஜான் ஸ்னோலிங் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 6 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |