பிரான்சின் கோழி இறைச்சி மீதான இறக்குமதி தடையை தளர்த்திய 2 முக்கிய நாடுகள்
பிரான்ஸ் நாட்டிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மற்றும் கனடா தளர்த்தியுள்ளது.
2023 அக்டோபரில் பிரான்ஸ் அரசு வாத்துக்களுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பூசி வழங்க முடிவெடுத்தது.
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் கனடா பிரான்சில் இருந்து சில கோழி இறைச்சியை (poultry) இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது.
தற்போது, அமெரிக்கா மற்றும் கனடா அந்த தடைகளை தளர்த்தியுள்ளதாக பிரான்ஸ் வேளாண்மை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பறவைக்காய்ச்சலின் பாதிப்பு
பறவைக்காய்ச்சல் (HPAI) என்பது உலகளவில் கோழிப்பண்ணைமீதான தீவிர தாக்கத்தைக் கொண்ட வைரஸ் நோயாகும்.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பு
பிரான்ஸ், உலகளவில் பறவைக்காய்ச்சலுக்கு தேசிய அளவில் தடுப்பூசியை நடைமுறைப்படுத்திய முதல் நாடாக இருக்கிறது. இதன் மூலம் நோயின் பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
ஆனால், தடுப்பூசி போடப்பட்ட பறவைகளுக்கு நோய் அறிகுறிகள் தெரியாது என்பதால், சில நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தடை தளர்த்தல்
ஏறக்குறைய ஒரு ஆண்டு நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள், பிரான்ஸ் தடுப்பூசி நடவடிக்கைகள் பாதுகாப்பானது என ஒப்புக் கொண்டன. இதனால், தடுப்பூசி செலுத்தாத கோழிகளின் இறக்குமதி மீண்டும் துவங்க உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு பறவையின் மரபணு பொருட்கள் (உதாரணம்: முட்டைகள் மற்றும் குஞ்சுகள்) கையிருப்பை மேம்படுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளின் வாத்து மற்றும் வாத்து சார்ந்த பொருட்களின் இறக்குமதி மீதான தடையை அமெரிக்கா தளர்த்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US and Canada ease ban on French poultry, bird flu vaccination