6000 வெளிநாட்டு மாணவர்கள் விசா ரத்து: அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?
6000க்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மாணவர்கள் விசா ரத்து
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்ற விதிகளை கடுமையாக்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டினரை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.
மேலும் போராட்டங்களில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி வெளிநாட்டு மாணவர்களின் விசாகளும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத் துறை ரத்து செய்துள்ளது.
இதற்கு பயங்கரவாதத்தை ஆதரித்தது முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், குற்றச் செயல்கள் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது போன்ற பல்வேறு காரணங்களை வைத்து டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |