ஈரானின் Touska சரக்கு கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா: பேச்சுவார்த்தையில் சிக்கல்
ஈரானுக்கு சொந்தமான சரக்குக் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்து இருப்பதன் மூலம் பிராந்தியத்தில் பதற்றமானது அதிகரித்துள்ளது.
ஈரான் சரக்கு கப்பல் சிறைப்பிடிப்பு
ஈரானிய கொடியுடன் சென்ற டூஸ்கா(Touska) என்ற சரக்கு கப்பல் அமெரிக்க படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையானது சட்டவிரோதமானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பிடம் ஈரான் புகார் அளித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே 2 வார அமைதி ஒப்பந்தமானது முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஈரானுக்கு சொந்தமான சரக்குக் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்து இருப்பது பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள்
ஈரானிய செய்தி நிறுவனம் IRNA வெளியிட்ட தகவலில், ஈரானிய கப்பலில் இருந்த ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சிறைபிடித்து சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக வைத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் ஈரானிய கப்பல் ஊழியர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் ஈரானின் டூஸ்கா கப்பலை சிறைப்பிடித்தது சட்டப்பூர்வமானது தான் என்றும், இந்த நடவடிக்கை கடற்படை முற்றுகையின் ஒரு பகுதி என்றும் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |