தீப்பற்றி எரிந்தபடியே பறந்த விமானம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தீப்பற்றியபடி பறந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.46 மணியளவில், அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டுள்ளது.
இது அட்லஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஆகும். சான் ஜுவான் நகருக்கு இந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இவ்விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் தீப்பிடித்துள்ளது. இதனால் எரிந்தபடியே வானில் பறந்துள்ளது.
?#BREAKING: Atlas Air Boeing 747-8 catches fire with sparks shooting out during mid flight.#Miami | #Florida #boeing7478 #atlasair pic.twitter.com/3IO5xFvMr6
— Noorie (@Im_Noorie) January 19, 2024
இதனை அறிந்த விமானி உடனடியாக மியாமி விமான நிலையத்திற்கே திருப்பினர். அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர், விமானம் தரையிறங்கியதும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்த நிலையில் விமானம் தீப்பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |