வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய அமெரிக்கா? இருளில் மூழ்கிய நகரம்
வெனிசுலா தலைநகர் கராகஸில் குறைந்தது ஏழு குண்டுவெடிப்புகளும், தாழ்வாகப் பறக்கும் விமானங்களும் காணப்பட்ட நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் தாக்குதலைத் தொடங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தலைநகர் கராகஸில்
வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் விமானங்கள், உரத்த சத்தங்கள் மற்றும் குறைந்தது ஒரு புகை மண்டலம் ஆகியவை நேரில் பார்த்தவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வெடிச்சத்தம் எதுவென்று உறுதி செய்யப்படவில்லை. உள்ளூர் நேரம் அதிகாலை 1:50 மணிக்கு இந்த குண்டுவெடிப்புகள் தொடங்கியதாகவும், அவற்றில் ஒன்று வெனிசுலா பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஃபோர்ட் டியோனாவை இலக்காகக் கொண்டதாகவும் CNN செய்தி வெளியிட்டுள்ளது.
பதவியில் இருந்து விலக
முக்கிய இராணுவத் தளத்திற்கு அருகில் உள்ள ஒரு நகரத்தின் தெற்குப் பகுதி தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கியுள்ளது. இச்சம்பவங்களை அடுத்து பல்வேறு சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள் தெருக்களுக்கு விரைந்து வெளியேறியுள்ளனர்.
மதுரோவை பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளுக்கு மத்தியில், வெனிசுலாவில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ட்ரம்ப் பலமுறை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

சமீப மாதங்களில், பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கப்பல்கள் மீது இருபதுக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |