அமெரிக்காவிடம் இருந்து விமானங்களை வாங்கும் சீனா: விண்வெளியில் இணைந்து செயல்பட விருப்பம்
அமெரிக்க தயாரிப்பு விமானங்கள் மற்றும் உதிரிபாகங்களை வாங்கும் ஒப்பந்தத்தை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையிலான ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சீன சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, அமெரிக்க தயாரிப்பு விமானங்கள் மற்றும் விமான தொழில்நுட்ப உதிரி பாகங்கள் ஆகியவற்றை சீனா வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிடம் இருந்து கணிசமான எண்ணிக்கையில் வணிக விமானங்களை வாங்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் சீனாவிற்கு தேவையான ஜெட் இஞ்சின்கள் மற்றும் விமான உதிரி பாகங்களை தடையில்லாமல் வழங்குவதை அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
மேலும் விண்வெளி மற்றும் விமானத் துறையில் அமெரிக்கா-சீனா இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.

அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், முதற்கட்ட தகவலின் படி, 200 போயிங் விமானங்கள் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 450 எஞ்சின்களை வாங்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |