உண்மையை மறைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை ரத்து
அமெரிக்காவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த இந்தியரின் குடியுரிமை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியரின் குடியுரிமை ரத்து
அமெரிக்காவில் நடைபெறும் பயங்கரவாத, வன்முறை சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் இந்தியாவை சேர்ந்த 62 வயது தேபாஷிஸ் கோஷ் என்பவரின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தேபாஷிஸ் கோஷ் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றுள்ளார்.

பல்வேறு அமெரிக்க நீதிமன்றங்களில் குடியுரிமை ரத்து தொடர்பான நடவடிக்கையில் உள்ள 12 பேரில் தேபாஷிஸ் கோஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த 12 பேர் மீதும் பயங்கரவாத குழுவிற்கு ஆதரவு, பாலியல் ரீதியான குற்றங்கள், அத்துமீறல்கள் ஆகியவை சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை சட்டத்தின் படி, சம்பந்தப்பட்ட நபர் உண்மைகளை மறைத்தும், வேண்டும் என்று பொய்யான தகவல்களை வழங்கியும் குடியுரிமை பெற்றிருந்தால் அந்த குடியுரிமை ரத்து செய்யப்படும்.

தேபாஷிஸ் கோஷ் தன்னுடைய இருப்பிடத்தை தவறாக தெரிவித்து முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை மோசடி செய்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபுகும் ஒவ்வொரு நபரையும் பின்தொடர, சட்டத்தில் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க குடியுரிமை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |