கடத்தல் நீர்மூழ்கி கப்பலை வேட்டையாடி பிடித்த கடலோர காவல்படை: மிரளவைக்கும் நிஜ ஆக்ஷன் காட்சிகள்
அமெரிக்க கடலோரக் காவல்படை 17,000 பவுண்டுகள் கொக்கைனை எடுத்துச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பலைத் துரத்திப் பிடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்க கடலோர காவல்படையின் கடல் போதைப்பொருள் கடத்தல் காட்சிகளை அமெரிக்க கடற்படை நிறுவனம் வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் நடந்த போதைப்பொருள் வேட்டையின் பரபரப்பான காட்சிகளை கடற்படை நிறுவனம் ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளது.
போதைப்பொருள் கடத்திய 'நார்கோ நீர்மூழ்கிக் கப்பலை' அமெரிக்க கடலோரக் காவல்படை துரத்தி கைது செய்ததை வீடியோ காட்டுகின்றன.
US Coast Guard
அந்த வீடியோவில், கடலோர காவல்படை கப்பல்கள் நார்கோ நீர்மூழ்கிக் கப்பலை அதிவேகமாக துரத்துகின்றன, அதைத் தொடர்ந்து கடலோர காவல்படை வீரர்கள் நீர்மூழ்கிக் கப்பலின் மேல் குதித்து, கதவைத் திறந்து அதிலிருந்த நபரை கைது செய்தனர்.
#OTD in 2019, crew members from U.S. Coast Guard Cutter Munro chased down and boarded a narco-submarine in the Eastern Pacific, seizing 17,000 pounds of cocaine with an estimated value of $232 million. pic.twitter.com/pKoZU3EDk9
— U.S. Naval Institute (@NavalInstitute) June 18, 2023
இந்த போதைப்பொருள் வேட்டையின் போது, கடலோர காவல்படையினர் 7711 கிலோகிராம் கோகோயின் கைப்பற்றினர். சந்தையில் இதன் மதிப்பு சுமார் 232 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூபா. 7150 கோடி).
US Coast Guard, Submarine, Smuggling
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |