23 வயது கல்லூரி மாணவியை கடித்து கொன்ற 3 பிட்புல் நாய்கள்: நாயை சுட்டுக் கொன்ற அதிகாரி
அமெரிக்காவில் 23 வயது கல்லூரி மாணவி கொடூரமான நாய் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் தாக்குதலில் உயிரிழந்த கல்லூரி பெண்
அமெரிக்காவின் டெக்சாஸில் டைலர்(Tyler) பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 3 பிட்புல் இன நாய்களை பாராமரித்து வந்த 23 வயது கல்லூரி மாணவி மேடிசன் ரிலே ஹல் கொடூரமான நாய் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மேடிசன் ரிலே ஹல் நாய் தாக்குதலுக்கு உள்ளாகி அவரது வீட்டின் பின்புறத்தில் உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இளங்கலைப் பட்டம் பெற 6 மாதங்களே மீதம் இருந்த நிலையில் மேடிசன் ரிலே ஹல் உயிரிழந்து இருப்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய்களின் உரிமையாளர் வெளியூருக்கு சென்றிருந்த போது 3 பிட் புல் நாய்களையும் மேடிசன் ரிலே ஹல் தான் கவனித்து வந்துள்ளார்.
என்ன நடந்தது?

நவம்பர் 21ம் திகதி மாலை 4 மணியளவில், வீட்டின் பின்புறத்தில் கேட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அண்டை வீட்டுக்காரர் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உயிரிழந்து கிடந்த மேடிசன் ரிலே ஹலை கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது அதிகாரிகளை நோக்கி 3 பிட்புல் நாய்கள் வந்ததாகவும், அப்போது அவற்றில் ஒன்றை அதிகாரிகள் துப்பாக்கி சுட்டுக் கொன்ற நிலையில் மற்ற இரண்டு நாய்களும் ஓடி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் வழங்கிய தகவல்படி, நாய்களை மீண்டும் வீட்டிற்குள் அடைக்க முயன்றபோது 3 பிட்புல் நாய்களும் மேடிசன் ரிலே ஹலை கடுமையாக தாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |