தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிளப்பில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்!
அமெரிக்காவின் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிளப்பில் சனிக்கிழமை இரவு பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது குறி
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிளப்பில் சனிக்கிழமை இரவான நேற்று பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் 18 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
At least five people have been shot dead at a gay nightclub in Colorado Springs in the US - which the venue is calling a 'hate attack.'
— Sky News (@SkyNews) November 20, 2022
More here: https://t.co/1YO7cHZPhl pic.twitter.com/tXVJwYoQqN
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தன்பாலின ஈர்ப்பாளர்களின் "கிளப்-Q" அவர்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட அர்த்தமற்ற பேரழிவு தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் துப்பாக்கிதாரி-யை மடக்கி பிடித்த வாடிக்கையாளருக்கு நன்றி எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
இரவு 11:57 மணியளவில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிதாரி-யை கைது செய்தனர்.
துப்பாக்கிதாரி-யின் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தெளிவான தகவல்கள் தற்போது வழங்க முடியாது, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Club Q nightclub in Colorado-கொலராடோவில் உள்ள கிளப் கியூ இரவு விடுதி(Google street view)
கடந்த 2016 ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிளப்பில் நடத்தப்பட்ட இது போன்றதொரு தாக்குதலில் 49 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.