ஈழத்தமிழர்களுக்காக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வரலாற்று தீர்மானம்!
இலங்கையில் (Sri Lanka) இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்கு சுதந்திர வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றில் (United States Congress) முன்வைத்துள்ளனர்.
அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் 7 உறுப்பினர்களுடன் இணைந்த நிலையில், அதன் ஒரு உறுப்பினரான வைல்லி நிக்கலினால் (Wiley Nickel), இந்த தீர்மானம் அந்த இழப்பை நினைவுகூருகிறது, ஆனால் "எதிர்கால வன்முறை மற்றும் பாகுபாடுகளில்" இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
H-RES 1230 என அழைக்கப்படும் இந்த தீர்மானம், ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
தீர்மானத்தின் முதன்மைக் கோட்பாடு
1. ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்காவை வலியுறுத்துதல்
2. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுமாறு அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்துதல்
3. இலங்கை செய்த தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
வன்முறையால் சிதைக்கப்பட்ட பல வருட மோதல்களைத் தொடர்ந்து தமிழ் அரசியலில் இந்தத் தீர்மானம் ஒரு முக்கிய முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்தகால வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை வளர்ப்பதற்கும் கணிசமான முன்னேற்றத்தை இந்தத் தீர்மானம் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |