ஈரானுக்கு எதிராக... மிகப்பெரிய நகர்வு ஒன்றை ரகசியமாகப் பரிசீலித்து வரும் அமெரிக்கா

Donald Trump Iran
By Arbin Oct 15, 2026 05:55 AM GMT
Report

US considering using ‘mother of all bombs’ against Iran: ஈரானுக்கு எதிராக மிகப்பெரிய குண்டைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி தளங்களை இலக்கு வைப்பதற்காக, மிகப்பெரிய குண்டைப் பயன்படுத்துவது உள்ளிட்ட புதிய தாக்குதல் திட்டங்களை அமெரிக்க ராணுவம் உருவாக்கியுள்ளது.

அணு ஆயுதம் அல்லாத

ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப், இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டால், தொடர்புடைய திட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக... மிகப்பெரிய நகர்வு ஒன்றை ரகசியமாகப் பரிசீலித்து வரும் அமெரிக்கா | Us Considering Using Moab

MOAB என அறியப்படும், அமெரிக்க ஆயுதக் கிடங்கில் உள்ள மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லாத குண்டு, ஈரானுடனான மோதலில் முதல் முறையாகப் பயன்படுத்தப்படும் என்றால், இது குறிப்பிடத்தக்க பதற்ற அதிகரிப்பைக் குறிக்கும் என்றே கூறுகின்றனர்.

இருப்பினும், ட்ரம்ப் கூறிய எந்தவொரு மூலோபாய நோக்கங்களையும் நிறைவேற்றுவதிலோ அல்லது போரின் போக்கை மாற்றுவதிலோ அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறையாக மாறிய மாணவர் போராட்டம்... ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதல்

வன்முறையாக மாறிய மாணவர் போராட்டம்... ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதல்

அமெரிக்க மக்களால் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ள இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தத்தை ட்ரம்ப் எதிர்கொள்கிறார். ஈரான் போர் தொடர்பில் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களில் வாக்காளர்களிடமிருந்து ஏற்படக்கூடிய அரசியல் ரீதியான பின்னடைவுகளுக்குக் குடியரசுக் கட்சியினர் ஏற்கனவே தயாராகி வருகின்றனர்.

மேலும் ஆறு மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா குண்டுவீசித் தாக்கிய பின்னரும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றே கூறுகின்றனர்.

ஈரானுக்கு எதிராக... மிகப்பெரிய நகர்வு ஒன்றை ரகசியமாகப் பரிசீலித்து வரும் அமெரிக்கா | Us Considering Using Moab

ஈரான் தொடர்பில் சாத்தியமானத் தாக்குதல் திட்டங்களை அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக ட்ரம்பிற்கு அளித்து வந்துள்ள நிலையிலும், உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய வகையில், அந்தத் திட்டங்களை உள்ளடக்கிய ஒரு வியூகம் வெள்ளை மாளிகையிடம் உள்ளதா எனச் சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இஸ்ரேலின் அழுத்தம் மற்றும் நெதன்யாகுவின் தேர்தல் ஆதாயத்திற்காகவே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக மக்கள் நம்பும் நிலையில், பல மாதங்களாக, போருக்கு ஒரு திட்டவட்டமான முடிவாக அமையக்கூடிய வழிமுறைகள் குறித்து ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும் விவாதித்து வருகின்றனர்.

தாக்குதல் திட்டங்கள்

நிர்வாகத்தின் சில பிரமுகர்கள் போரில் அடிப்படையில் வெற்றி பெறப்பட்டுவிட்டது என்று கூறியபோதிலும், அதை வெளிப்படையாக அறிவிக்க ட்ரம்ப் தயங்கி வருகிறார். மட்டுமின்றி, அமெரிக்கப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகருமாறு தன்னை ஊக்குவித்த சில நட்பு நாடுகள் மீதும் ட்ரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவ்வாறு செய்வது ஒரு தோல்வியாகத் தோன்றும் என்றும் ட்ரம்ப் வாதிட்டுள்ளார். இந்த நிலையில், ஈரானிய இலக்குகளுக்கு எதிராக, பெருமளவிலான எரிசக்தி உள்கட்டமைப்புகளை உள்ளடக்கிய கூடுதல் தாக்குதல் திட்டங்களையும், MOAB குண்டின் சாத்தியமான பயன்பாட்டையும் உருவாக்குமாறு ட்ரம்ப் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிராக... மிகப்பெரிய நகர்வு ஒன்றை ரகசியமாகப் பரிசீலித்து வரும் அமெரிக்கா | Us Considering Using Moab

MOAB குண்டால் ஒன்பது நகரத் தெருக்களுக்குச் சமமான பரப்பளவை அழிக்கும் திறன் இருந்தாலும், பிக்காக்ஸில் உள்ள சந்தேகிக்கப்படும் அணுசக்தி நிலையங்களை அழிக்கும் அளவுக்கு பூமிக்கு அடியில் ஆழமாக ஊடுருவும் திறன் அதற்கு இருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.

மேலும், அந்த வெடிகுண்டின் பிரம்மாண்டமான வெடிப்புச் சுற்றளவு, பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையை எழுப்பும்.

இருப்பினும், ஈரானிய நிர்வாகம் தற்போதைய நிலையில் பிடிவாதமாக இருப்பதாலும், ட்ரம்பின் இராஜதந்திரக் கோரிக்கைகளுக்குப் பணிய மறுப்பதாலும், ட்ரம்ப் MOAB குண்டை ஒரு உளவியல் ஆயுதமாகப் பயன்படுத்தத் தீர்மானிக்கக்கூடும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US