ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஏனென்றால் தற்போதைய கடல்சார் முற்றுகை நடவடிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு தற்போது எந்தவொரு அதிகாரமும், கட்டுப்பாடும் இல்லை என்று மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானிய அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்த ட்ரம்ப்

பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் ஈரானிய அதிகாரிகள் தாங்களே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது அவர்களின் முயற்சி கெஞ்சுவது போல் இருந்தது.
ஆனால் மறுபுறம் நாங்கள் ஓமன் வழியாக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தொடர்பு கொள்வதாக வெளிப்படையாக பொய் கூறுகின்றனர் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |