சாலையை துப்பாக்கியுடன் வழிமறித்த இளம் பெண்: காரில் இடித்து தள்ளிய பொலிஸார்: வீடியோ
அமெரிக்காவில் சாலையில் நின்று கொண்டு துப்பாக்கி முனையை காட்டிய இளம் பெண் மீது பொலிஸார் காரை வைத்து இடித்து தள்ளி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளம்பெண்
அமெரிக்காவில் 33 வயதுடைய இளம் பெண் ஒருவர் வடக்கு பெல்மோர் பகுதியில் உள்ள சாலையின் போக்குவரத்து சிக்னல் அருகே நின்று கொண்டு அங்கு வரும் கார்களை நோக்கி துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வந்தார்.
இதையடுத்து இது தொடர்பான தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு மதியம் 2.20 மணிக்கு வந்தடைந்தனர்.
பொலிஸார் வருவதை பார்த்த அந்த பெண் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு சாலையின் குறுக்கே வந்தார், மேலும் பொலிஸார் கார் முன்னேறுவதை பார்த்து உடனடியாக தன்னுடைய தலையை நோக்கி துப்பாக்கியை திருப்பினார்.
?? En Nassau County, NY, una mujer amenazaba a conductores con un arma hasta que fue atropellada por una patrulla de la policía:pic.twitter.com/7oOChk3Y5L
— Emmanuel Rincón (@EmmaRincon) August 15, 2023
சூழ்நிலையை உடனடியாக உணர்ந்து கொண்ட பொலிஸார் சாலையில் நின்று கொண்டு இருந்த அந்த பெண்ணை காரால் இடித்து தள்ளினர்.
கீழே விழுந்த பெண் தன்னை மீண்டும் சமநிலைப் படுத்தி கொண்டு துப்பாக்கியை கையில் எடுக்க முயற்சித்த போது மற்றொரு காவலர் உடனடியாக இளம்பெண்ணை கட்டுப்படுத்தினார்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் நாசாவ் கவுண்டி பகுதியில் நடைபெற்ற நிலையில், சம்பந்தப்பட்ட பெண் குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்த துப்பாக்கியை கொண்டு வானை நோக்கி ஒரு முறை சுட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்
இந்நிலையில் பொலிஸார் இடித்து தள்ளியதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சாமர்த்தியமாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரியை கமிஷனர் ருடர் ஹீரோ என்று பாராட்டினார், அத்துடன் அவர்கள் மிகச் சிறந்த வேலையை செய்து முடித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பெயர் வெளியிடாத அந்த பெண் எதற்காக துப்பாக்கியுடன் சாலையில் தோன்றினார் என்ற காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |