அமெரிக்க வீரர்களை சிறை பிடித்துள்ளதாக கூறும் ஈரான் - மறுக்கும் அமெரிக்கா
அமெரிக்க வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வீரர்கள் சிறைபிடிப்பா?
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போரில் இதுவரை 7 அமெரிக்கா வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது என ஈரானின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNCS) செயலாளராக பணியாற்றி வரும் அலி லாரிஜானி, "அமெரிக்கா வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. ஆனால் வீரர்கள் போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
It has been reported to me that several American soldiers have been taken prisoner. But the Americans claim that they have been killed in action. Despite their futile efforts, the truth is not something they can hide for too long.
— Ali Larijani | علی لاریجانی (@alilarijani_ir) March 7, 2026
அவர்களின் பயனற்ற முயற்சிகள் இருந்தபோதிலும், உண்மையை அவர்களால் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "அமெரிக்க வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கையை உயிரிழப்பை அமெரிக்கா குறைத்து காட்டி வருகிறது" எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், லாரிஜானியின் கூற்றை மறுத்துள்ள அமெரிக்காவின் CENTCOM "அமெரிக்க வீரர்களைக் கைப்பற்றியதாக ஈரானிய ஆட்சியின் கூற்றுகள் அதன் பொய்கள் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு” என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |