தீவிரமடையும் ஈரான் விவகாரம்... ட்ரோன்களை அனுப்பி ஆய்வு செய்த அமெரிக்கா
ஈரான் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கா நேற்று இரவு ஈரானுக்கு எதிரான சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் பாதுகாப்பு
மத்திய கிழக்கில் இன்னொரு அமெரிக்க போர் கப்பல் நுழைந்துள்ளதுடன், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள தளங்களிலிருந்து ஐரோப்பாவிற்குப் புறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் பாதுகாப்பு நிலைகளை ஆய்வு செய்ய அமெரிக்கா ட்ரோன்களை அனுப்பியுள்ளது. இதனிடையே, ஈரானை பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியில், சர்வதேச தூதரக முயற்சிகள் நேற்று இரவு தீவிரப்படுத்தப்பட்டன.
பிராந்திய மோதலைத் தடுக்கும் நோக்கில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அரசாங்கம் தனது அணுசக்தி லட்சியங்களைக் கைவிட வேண்டும் என்றும், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் எண்ணிக்கைகளைக் குறைக்கவும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற குழுக்களுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அணு ஆயுதங்கள் இல்லை என்பதாலையே, உக்ரைன் ரஷ்யாவால் தாக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இருப்பதாலையே, வட கொரியா தற்போதும் எந்த மேற்கத்திய நாடுகளையும் அண்ட விடாமல் தற்காத்து வருகிறது.
இதனிடையே, அமெரிக்க கடற்படையின் MQ-4C ட்ரோன் ஒன்று ஈரானின் கடற்கரைக்கு அருகில் வளைகுடாப் பகுதியில் காணப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. MQ-4C ட்ரோன் என்பது கண்காணிப்புக்கு என மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பத்து போர்க்கப்பல்கள்
அது அபுதாபியில் உள்ள ஒரு தளத்திலிருந்து புறப்பட்டு, ஹோர்முஸ் நீரிணைக்கு மேல் காணப்பட்டது. மட்டுமின்றி, அமெரிக்காவின் பி-8 போஸிடான் உளவு விமானமும் ஈரான் அருகே களமிறக்கப்பட்டுள்ளது.
விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உட்பட, தற்போது குறைந்தது பத்து அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

90 போர் விமானங்கள் வரையில் தாங்கும் USS Abraham Lincoln கப்பலானது தற்போது தனது டிரான்ஸ்பாண்டர்களை அணைத்துவிட்டுள்ளதால் அதன் இயக்கத்தில் ரகசியம் காக்கப்படுகிறது.
இந்த நிலையில், தங்கள் பலத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஈரானிய ஆயுதப் படைகள் பிப்ரவரி 1 ஆம் திகதி ஹோர்முஸ் நீரிணையில் நேரடிப் பயிற்சிகளைத் தொடங்கவுள்ளன.
முக்கிய திருப்பமாக ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் புரட்சிகரப் படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் நேற்று பதிலடி கொடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |