ஈரானை நோக்கி JASSM ஏவுகணைகள் - மோசமான தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா
அமெரிக்கா JASSM - ER ஏவுகணைகளில், மூன்றில் 2 பங்கை ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
2 நாட்களில் முடிவடையும் கெடு
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடங்கிய தாக்குதல், 5வது வாரமாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது ஹார்மோஸ் நீரிணையை திறக்க வேண்டும் என டிரம்ப் 10 நாட்கள் கெடு விதித்தார்.
இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது என ஈரான் நிராகரித்து, தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கெடு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள அல்லது ஹோர்முஸ் நீரிணையை திறந்துவிட ஈரானுக்கு நான்10 நாட்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா? நேரம் விரைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் அவர்கள் மீது நரகம் கவிழும். கடவுளுக்கே மகிமை" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், உங்களுக்கு நரகத்திற்கான கதவுகள் திறக்கப்படும். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கட்டமைப்பு மற்றும் இஸ்ரேல் மீது தாக்கல் நடத்தப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது மோசமான தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு ஒதுக்கப்படும் JASSM - ER ஏவுகணைகள்
அமெரிக்கா தனது ஆயுத கிடங்கில் உள்ள JASSM - ER ஏவுகணைகளில், மூன்றில் இரண்டு பங்கை ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கையிருப்பு கிடங்குகளில் இருந்து 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த ஏவுகணைகளைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவுகள் மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்டன.
இதன் மூலம், சுமார் 425 JASSM - ER ஏவுகணைகள் மட்டுமே உலகளாவிய பயன்பாட்டிற்காக எஞ்சியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை, சுமார் 17 B-1B லான்சர் குண்டுவீச்சு விமானங்கள் மேற்கொள்ளும் ஒரே ஒரு பணிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். மேலும், சேதம் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கிட்டத்தட்ட 75 ஏவுகணைகள் பயன்படுத்த முடியாதவை எனக் கருதப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டு முதல் 6,200 க்கும் மேற்பட்ட JASSM ஏவுகணைகளை வாங்குவதற்காக அமெரிக்கா நிதி ஒதுக்கியுள்ளது, மேலும் அமெரிக்க விநியோகத்திற்கான அடிப்படை JASSM உற்பத்தி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது.
JASSM - ER ஏவுகணை என்பது 600 மைல்களுக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட, துல்லியமாக வழிநடத்தப்படும் ஒரு நீண்ட தூரப் பயண ஏவுகணையாகும்.

இது எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, பாதுகாப்பான தூரத்திலிருந்து இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 2 அமெரிக்கா போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், அமெரிக்க விமானிகள் ஈரான் படையிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களை வெற்றிகரமாக மீட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
JASSM - ER ஏவுகணைகளை பாரிய அளவில் பயன்படுத்துவதன் மூலம், தனது ராணுவ வீரர்களை பாதுக்காக்கும் அதேவேளையில், எதிர்காலத்தில் சீனா போன்ற சக்தி வாய்ந்த எதிரிகளுடனான சாத்தியமான மோதல்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆயுதக் கையிருப்புகளையும் குறைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |