முக்கிய நிகழ்ச்சிக்கு அமெரிக்க தூதராகிய பெண் அணிந்துவந்த உடையால் சர்ச்சை
பல நாட்டு தூதர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு, கிரீஸ் நாட்டிற்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பெண் அணிந்துவந்த உடை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க தூதர் அணிந்துவந்த உடையால் சர்ச்சை
Thanksgiving கூடுகை ஒன்றில் இன்று கலந்துகொண்ட கிரீஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதரான கிம்பர்லி (Kimberly Guilfoyle), கருப்பு நிற உடை ஒன்றை அணிந்திருந்தார்.
அந்த உடை உள்ளே அணிந்திருக்கும் உடை தெரியும் வகையிலான (transparent) உடையாக இருந்தது.
அதுவும், கிம்பர்லி பேசுவதற்காக மேடை ஏற, அந்த உடை அப்பட்டமாக மக்கள் கண்களில் பட, இது என்ன பார்ட்டிக்கு போவதுபோல ஒரு தூதர் உடை அணிந்திருக்கிறார் என பலரும் விமர்சனம் முன்வைத்துள்ளார்கள்.
The ambassador of the United States of America to Greece. Happy Thanksgiving. pic.twitter.com/u6SOBlI9o4
— Olga Nesterova (@onestpress) November 26, 2025
உண்மையில் கிம்பர்லியின் உடை transparent உடை அல்ல, அவரது உடை உள்பக்கம் திக்கான ஒரு துணியுடன் இணைத்துதான் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த துணி அவரது உடல் நிறத்திலேயே இருக்க, பார்ப்பதற்கு அது சற்று மோசமான காட்சியாக அமைந்துவிட, அவர் உரையாற்றும் வீடியோவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்த கிம்பர்லி, அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் மகனான ட்ரம்ப் ஜூனியரின் முன்னாள் காதலி ஆவார். இருவரும் ஆறு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |