கப்பல் மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயம் - அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்
கப்பல் மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமாகியுள்ள நிலையில், அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
3 இந்தியர்கள் மாயம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஓமானின் சோஹார் துறைமுகத்திலிருந்து வடகிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் ஹார்மோஸ் நீரிணைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது, பலாவ் கொடியை ஏந்திய செட்டபெல்லோ கப்பல் மீது அமெரிக்க கடற்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏவுகணை கப்பலின் என்ஜின் அறையைத் தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து, ஆபத்து அழைப்பை அனுப்பியுள்ளனர்.
அதில் இருந்த 28 மாலுமிகளில், 24 பேர் இந்திய நாட்டினர் ஆவார்.
இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 இந்திய மாலுமிகள் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தொடர்ந்து தேடி வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்
தொடர்ச்சியாக அந்த பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்படுவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம், கண்டனம் தெரிவித்துள்ளது.
Our statement on the attack on a commercial vessel off the coast of Oman ⬇️https://t.co/w405oJsHmZ pic.twitter.com/m0U3U81hQn
— Randhir Jaiswal (@MEAIndia) June 10, 2026
மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்புத் தூதரான ஜேசன் மீக்ஸ், வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு, வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த கவலைகளைத் தெரிவிக்கும் ஒரு கண்டன அறிக்கையை அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர், பலாவ் நாட்டின் கொடியின் கீழ் பயணித்துக் கொண்டிருந்த, சரக்குகள் இல்லாத எம்டி மரிவெக்ஸ் எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் இதேபோல் தாக்கிச் செயலிழக்கச் செய்தது. இதில் இருந்த 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |