அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில் துப்பாக்கிச் சூடு: அடையாளங்களை வெளியிட்ட பொலிஸார்
அமெரிக்காவில் குடியிருப்பு பராமரிப்பு மற்றும் பூஞ்சை பிரச்சனை தொடர்பாக நீண்ட காலமாக நீடித்து வந்த தகராறு காரணமாக குடியிருப்பு மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகைக்கு வடக்கே சுமார் 1 மைல் தூரத்தில் லோகன் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் பராமரிப்பு மற்றும் பூஞ்சை தொடர்பான தகராறு நீண்ட காலமாக நீடித்து வந்த நிலையில், மருத்துவர் ஒருவர் அந்த குடியிருப்பு மேலாளரை சுட்டுக் கொன்றுள்ளார்.
அந்த மருத்துவர் மேலும் நான்கு பேரை சுட்டுக் காயப்படுத்தியதுடன் தானும் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

காவல்துறையினர் வெளியிட்ட தகவல் படி, குடியிருப்பு மேலாளரான 46 வயது ஜேம்ஸ் ஸ்டூவர்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மற்ற 4 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மருத்துவர் 55 வயது மாட் வேட் லாம்பர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.