உங்கள் உதடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றனவா? அமெரிக்க மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை தகவல்
உங்கள் உதடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றனவா?
உங்கள் தோலும், நகங்களும் சாம்பல் நிறமாக உள்ளனவா? அவை கொரோனாவின் அவசர எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.
அமெரிக்க நோய் தடுப்பு மையம் ஒருவருக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அவர் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில், இந்த சாம்பல் நிற உதடுகள், தோல் மற்றும் நகம் என்னும் இந்த அறிகுறிகள் Omicron வைரஸுக்கே உரிய அறிகுறிகள் என கூறப்பட்டாலும், அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா காலகட்டம் துவங்கியதிலிருந்து இந்த சாம்பல் நிற மாற்றத்தை உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய ஒரு அறிகுறி என அங்கீகரித்துள்ளார்கள்.
அமெரிக்க நோய் தடுப்பு மையம், தலைவலி, தொண்டை அழற்சி, தலைசுற்றல் முதலான 11 அறிகுறிகளை கொரோனாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஆனாலும், பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS, இன்னமும் காய்ச்சல், தொடர்ச்சியான இருமல் மற்றும் வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகிய மூன்று அறிகுறிகளையே கொரோனாவுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக அங்கீகரித்துள்ளது.